பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலம். இக்கோவிலில் வீற்றுள்ள சுவாமி, ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று, குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு, பார் வேட்டை உற்சவம் செல்வார். இன்று, இந்த உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் சுவாமி, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளைபெற்றாள், காரணை, குச்சிக்காடு ஆகிய கிராமங்கள் வழியே, குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை, பிற்பகலில் அடைகிறார். அங்கு சிறப்பு அபிஷேக திருமஞ்சனத்திற்கு பின், மாலை, அலங்கார முயலை வேட்டையாடி, இரவு வீதியுலா சென்று, நாளை அதிகாலை மாமல்லபுரம் கோவிலை அடைகிறார்.