பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன், மலர் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு கோபி டவுன் பகுதியில் ஊர்வலம் வந்தார். பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா, டிச.,29ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 12ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில், ஜொலிக்கும் மின் விளக்குகள் தோரணையுடன் பாரியூர் அம்மன், கோபி நகரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பாரியூரில் துவங்கி, பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, முருகன்புதூர், மேட்டுவலவு வழியாக, கோபி டவுனை மலர் பல்லக்கு அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் விடியவிடிய காத்திருந்து, அம்மனை தரிசித்தனர். அதன்பின் மலர் பல்லாக்கில் வலம் வந்த அம்மன், சரவணா தியேட்டர் ரோடு, பெருமாள்கோயில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக பெருமாள் கோவிலை அடைந்தது. அதை தொடர்ந்து, தெப்போற்சவம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது.