Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பொங்கல் ... திருவேட்டீஸ்வரர் கோவிலில் 19ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
02:01

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவள்ளூர், ஜெயா நகர் விஸ்தரிப்பில் அமைந்துள்ள வல்லப கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையும், தொடர்ந்து, கணபதி ஹோமமும் நடைபெற்றது. பிரார்த்தனை தேங்காய்கள் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தன. பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள காரிய சித்தி கணபதி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், ஆயில் மில் அருகே உள்ள வெற்றி விநாயகர் கோவில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வழித்துணை விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும், சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. சங்கட நிவாரண ஹோமம்: சோழவரத்தை அடுத்த, பஞ்சேஷ்டியில் நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் காரிய சித்தி கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரை, சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. சங்கட நிவாரண ஹோமம் நிறைவடைந்தவுடன், மதியம் 2:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar