கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வேலிமலை குமார கோயில். முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளிமலையாக மருவியது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் கஞ்சி தர்மம் விசேஷமானது. இந்தக் கஞ்சி, நோய் தீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.