Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை கோவிலில் உழவாரப் பணி உடுமலை கோவிலில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
12:01

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பஜனை பாடியபடி பாதயாத்திரையாக சென்றனர்.

புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நன்மை வேண்டி, காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு பாதயாத்திரை துவங்கியது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், மங்களாசாஸனம் செய்து துவக்கி வைத்தார், 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர் மற்றும் புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைத்திக்குப்பம் வெங்கடா ஜலபதி பஜனைக் கூடம், சத்தியநாராயண ராமானுஜதாசன் பஜனை குழுவினருடன், குயவர்பாளையம் அரிகர பஜனை மடம் சார்பில் கிருஷ்ணர் ரதமும், யாத்திரையில் பங்கேற்றது.

பாதயாத்திரையொட்டி, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. வில்லியனுார் கீழ் அக்ரகாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, சரண்யா பக்தி இசை நடந்தது. ராமானுஜரும் திருவேங்கடமும் என்ற தலைப்பில் திண்டிவனம் வெங்கடேச ராமானுஜதாசர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். தஞ்சை தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவ தலைவர் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், பொருளாளர் வாசுதேவன் மற்றும்
நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதயாத்திரை சென்றவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar