பதிவு செய்த நாள்
27
ஜன
2017
05:01
சித்தர்களின் எண்ணிக்கையைப் பதினெட்டு என்பர். அகத்தியர், புலத்தியர், புசுண்டர், நந்தி, திருமூலர், காலாங்கிநாதர், உரோமமுனி, சட்டைமுனி, மச்சமுனி, யோகர், கொங்கணர், கருவூரார், தன்வந்திரி, தேரையர், பிண்ணாக்கீசர்,கோரக்கர், யூகிமுனி, இடைக்காடர் ஆகியோர் அவர்கள். பெரயளவில் 18 என்ற வரையறை இருந்தாலும் சித்தர்களின் எண்ணிக்கை வரையறை இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம், புவியியல், மந்திரம், ரசவாதம், யோகசாஸ்திரம் ஆகிய பலதுறைகளில் இவர்கள் நுõல்கள் இயற்றியுள்ளனர். பேச்சுநடையில் பாடல்கள் இருக்கும். கும்மிப்பாட்டு, சந்தப்பாட்டு, கண்ணிப்பாட்டு என்னும் வகையில் பாடல்கள் பாடியுள்ளனர். பெருந்திரட்டு, ஆயுர்வேத பாஷ்யம், வைத்தியசிகாமணி, நாடிசாஸ்திரம், ரசவாத சூத்திரம், வைத்தியக்கும்மி போன்ற மருத்துவநுõல்களை அகத்தியர் எழுதியுள்ளார். சித்தர் ஞானக்கோவையில், அகப்பேய் சித்தர் என்பவர் பாடிய பாடல்கள் உள்ளன. மனதைப் பேயாக உருவகப்படுத்தி இவர், 100 பாடல்கள் பாடியுள்ளார். அழுகுணிச் சித்தர் என்பதற்கு அழும் கண்களை உடையவர் என்பது பொருள். மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் அழுது கொண்டே பாடல்கள் பாடியதால் இப்பெயர் பெற்றார். இடைக்காட்டுச்சித்தரின் 140 பாடல்கள் சித்தர் ஞானக்கோவையில் இடம் பெற்றுள்ளன. தாண்டவக்கோன், நாராயணக்கோன் என்னும் பெயர்களைக் கொண்டு பாடல்கள் பாடியவர் இவர். மாடு மேய்க்கும் இருவர் தங்களுக்குள் உரையாடுவது போல, இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.