பழிவாங்கும் உணர்வில் இருந்து விலக சிறப்பு வழிபாடு ஏதுமிருக்கிறதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2017 04:01
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால் கோபத்தின் வெளிப்பாடாக பழி வாங்கும் உணர்வு உண்டாகிறது. எந்த செயலும் விதி வசத்தால் ஏற்பட்டதே தவிர, குறிப்பிட்ட நபரால் உண்டாவதில்லை என்பதை உணர்ந்தால் கோபம் தணியும். தவறு செய்தவருக்கு தண்டனை அளிப்பது கடவுளின் பொறுப்பு. பழி உணர்வு மனதில் எழும் போது, இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்தால் மனம் ஒருநிலைப்படும். தீய உணர்வில் இருந்து விடுபடும்.