விநாயகருக்கு மிகவும் பிடித்த நிவேதனம் கொழுக்கட்டை. பூரணஞானத்தின் அடையாளமாக இதனைக் கையில் ஏந்தியிருப்பார். இதன் வெளிப்பகுதி ஜீவாத்மாவையும், உட்பகுதி பரமாத்மாவையும் குறிக்கும். வசிஷ்டரின் மனைவியான அருந்ததியே முதன்முதலில் கொழுக் கட்டை தயாரித்து விநாயகருக்கு நிவேதனம் செய்ததாகக் கூறுவர்.