வெளியில் செல்லும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்கிறார்களே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 02:01
சாஸ்திரங்களில், நகச்சேத் ப்ராமண த்ரயம் என்றுதான் உள்ளது. அதாவது, பிராமணர்கள்தான் மூன்று பேராகச் செல்லக் கூடாது என்றுள்ளது. மற்றவர்களுக்கு அந்த தர்மம் கிடையாது. ஆனால், நாளடைவில் அது எல்லோருக்கும் பொதுவானதாக சொல்லப்பட்டுவிட்டது. பொதுவாக, நாம் வெளியில் செல்லும்போது, எதிரே ஒரு பிராமணர் வந்தார் என்றால் அது அபசகுனம். இதே அவர், பிராமணரல்லாதவராக இருந்தால் அது சுப சகுனம். அதுவே, அவர்கள் இருவராக என்றால் அது அபசகுனம். ஆனால், பிராமணர்கள் இருவராக வந்தார்கள் என்றால் அது சுபசகுனம், இப்படி மாறுகிறது. நாளடைவில் வசனங்கள் மறந்துபோனதால், இவ்வாறு செய்கிறார்கள். ஆகவே, இந்த மூன்று பேர் என்பது பிராமணர்களுக்குத்தான் மற்றவர்களுக்கு இல்லை.