பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள, கண்டிகாணி வகையறாவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான, பழனிமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள, கண்டிகாணி வகையறாவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான முருகன் கோவிலுக்கு, புதியதாக கட்டடம் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீர் கொண்டு வந்தனர். முன்னதாக, இடைப்பாடியில் உள்ள செல்லியாண்டி அம்மன் கோவில் தெரு, தோப்பூர் வழியாக, ஊர்வலமாக புனிதநீர் கொண்டு வந்து, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.