பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
ஈரோடு: உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், குங்குமவல்லி அம்மனுக்கு, 67ம் ஆண்டு வளைகாப்பு விழா, பிப்.,4ல் நடக்கிறது. குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில், கர்ப்பிணிகள் துயர் நீக்க தாயுமானவர் தானாக வந்ததால், தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்று, உறையூர் சாலை ரோட்டில் உள்ளது. அம்மனுக்கு ஆண்டு தோறும், தை மாதம் வளையல் காப்பு உற்சவம் நடைபெறும். விழா, பிப்.,4ல் தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அன்று மதியம், 2:30 மணிக்கு கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்க, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பிரசாதம், 48 நாட்கள் அம்மனிடம் வைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. அன்று காலை, 7:00 மணிக்கு, குழந்தை பாக்கியம், வேண்டுவோருக்கு அம்பிகையிடம் சிறப்பு பிரார்த்தனை ஹோம பூஜை நடக்கும். பிப்.,5ல் திருமணம் தடை நீங்கி, விவாகம் நடக்கவும், மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவேண்டி, மதியம், 1:00 மணியளவில் சிறப்பு பூஜை நடக்கிறது. மூன்று நாட்களும் அன்னதானம் உண்டு. விழாவில் பங்கேற்று, அம்பாள் அருள்பெற, கோவில் நிர்வாகி சித்ரா கருணாமூர்த்தி, ஹரிஹர குருக்கள் தெரிவித்தனர்.