பதிவு செய்த நாள்
01
பிப்
2017
11:02
ஓமலூர்: ஓமலூர் பல்பாக்கி, காளியம்மன், மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் விழாவுடன், தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. ஓமலூர் அருகே, பல்பாக்கியில் ஓங்காளியம்மன், மகாமாரியம்மன் கோவில் பண்டிகை, கடந்த மாதம், 17ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பின்னர், அம்மனுக்கு கம்பம் நடும் விழா நடந்தது. தேர்களுக்கு ஆயக்கால் நடுதல், பொடாரியம்மன் பூஜை, சக்தி அழைத்தல் ஆகியவை நடந்தது. நேற்று காளியம்மன், மாரியம்மன் மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று அதிகாலை முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில், தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பொங்கல் வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சிறப்பு அன்னதானத்துடன் சிங்கம், குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலை, 4:00 மணிக்கு ரோட்டம் நடக்கிறது.