திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தாடிக்கொம்பில் உள்ளது சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் பைரவருக்கு 21 மிளகை வெள்ளைத் துணியில் முடிந்து, அதை ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட, கடன் தொல்லை தீரும். திருமணம் கைகூடும், பிள்ளைப் பேறு வாய்க்கும், நோய்கள் அகலும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர், எதிரிகள் தொல்லை விலகும்.