காரைக்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள ஊர், கானாடுகாத்தான். இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு பரமனூர் காளியம்மன் சாந்நித்தியம் மிகுந்தவள். வழக்குகளில் நியாயமான தங்கள் தரப்புக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த அம்மனை வேண்டிக்கொண்டு, அம்மனுக்குப் புடவை சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.