பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
புதுார், மதுரை புதுார் லுார்தன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்.,3 துவங்கியது. முக்கிய விழாவான தேர்பவனி பிப்., 11ல் நடக்கிறது.
இந்த சர்ச்சின் 97வது ஆண்டு திருவிழா பிப்.,3 மாலை 6:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பங்கு சபையினர் எடுத்து வந்தனர். திருச்சி சலேசிய சபை மாநில தலைவர் ஆல்பர்ட் ஜான்சன் கொடியேற்றினார். தினமும் காலை, மாலையில் பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நடக்கிறது. பிப்., 10 மாலை 6:00 மணிக்கு திருச்சி சலேசி தலைவர் அந்தோணி ஜோசப் தலைமையில் நற்கருணைப் பவனி நடக்கிறது. பிப்., 11 காலை 7:00 மணிக்கு உதவி இயக்குனர் முத்துச்செல்வன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருத்தல பெருவிழா திருப்பலியும், இரவு 8:00 மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. பிப்., 12 காலை 6:00 மணி முதல் பாதிரியார்கள் அல்போன்ஸ் லாசர், ரெக்ஸ், அருள்குமார், பாஸ்கர், பிரான்சிஸ் ஆகியோர் தலைமையில் பொங்கல் விழாவும், மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை சர்ச் பாதிரியார் கமிலஸ் தலைமையில் பங்கு பேரவையினர் செய்து வருகின்றனர்.