பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணியை துரிதப்படுத்தி, கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
முதல்வர் நாராயணசாமியிடம், இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி ஆன்மிக தலமாக திகழ்வதற்கு, வேதபுரீஸ்வரர் கோவில் முக்கிய காரணமாக உள்ளது. இக்கோவிலுக்கு, 1998ம் ஆண்டு ஜானகிராமன் முதல்வராக இருந்தபோது கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், 18 ஆண்டுகள் ஆகி யும், வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.
கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடந்து வருவதை வரவேற்கிறோம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படாததால், திருப்பணி கள் மிகவும் மெதுவாக நடக்கிறது. எனவே, உடனடியாக கும்பாபிஷேகம் தேதியை முதல்வர் அறிவிக்க
வேண்டும். புதுச்சேரியில் உள்ள கோவில் களின் குருக்கள் அர்ச்சகர்கள், ஓதுவார்கள்.
பிரபஞ்ச ஓதுவார் கள், தேவார ஓதுவார்கள், பூசாரிகள் மணியக்காரர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், திருவிளக்கு பணியாளர்கள், பூமாலை கட்டுபவர்கள், கோவில் சிப்பந்திகள் மற்றும் காவலர்கள் அனைவரும் காலநேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு விலைவாசியை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ. பி.எப்., வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.