கள்ளிக்குடி: கள்ளிக்குடி குலசேகரபெருமாள் கோயில் மாறவர்ம குலசேகரபாண்டியனால் கடந்த 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மிகவும் சேதமடைந்த இக்கோயில் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன்எதிரொலியாக, பொதுமக்கள் பங்களிப்புடன் கோயிலை அறநிலையத்துறை புதுப்பித்தது. பிப்.,3 அழகர்கோவில் பாலகிருஷ்ண பட்டர் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது.