திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் கிராமம், செய்யாற்றில் ரத சப்தமியை முன்னிட்டு பிப்.,3, 394வது தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கலசப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, செய்யாற்றங் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரியில் பங்கு கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். வரும், 6ல் அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் என்பதால், இந்த ஆண்டு தீர்த்தவாரியில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பங்கேற்கவில்லை.