விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதஸப்தமி மகோற்சவம் நடந்தது. விழாவையொட்டி, பிப்.,காலை 6:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சூரிய பிரபை அலங்காரத்திலும், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், இந்திர விமானம், கற்பக விருட்சம் மற்றும் சந்திரபிரபை அலங்காரத்தில் சுவாமி உட்பிரகார வீதியுலா நடந்தது.