திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2017 05:02
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பிப் 6 நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகளும் யாகசாலை பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் கோயிலின் 5ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலை மண்டபத்தில் நடைபெற்ற எட்டாம் கால பூஜையில் நடந்த பூர்ணாஹுதியிலும், தீபாராதனையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் புனித கலச நீர் ஊற்றப்படும் கோபுர கலசங்கள் பார்ப்பதற்கு பரவசமூட்டும் வகையில் உள்ளது. விழாவையொட்டி ஸ்வாமி சன்னதியில் உள்ள மணிமர கதவிற்கு 25 கிலோ மதிப்பீட்டில் வெள்ளி தகடு பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக மற்றும் கூட்ட நெரிசலை சமாளிக்க தங்க கொடிமரம் அருகே கண்காணிக்கும் கேமரா வைக்கப்பட்டுள்ளது. தைகிருத்திகை முன்னிட்டு கம்பத்திளையனார் (முருகர்) சன்னதியிலிருந்து ஏராளமான முருகர் பக்தர்கள் காவடி எடுத்து மாடவீதி உலா வந்தனர்.