பதிவு செய்த நாள்
04
பிப்
2017
06:02
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாலையம்பட்டி, அருள்மிகு சீலக்காரியம்மன் திருக்கோயிலில் 3.2.2017 வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. அத்துடன் பாலவநத்தம் அருள்மிகு சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மாள் இருளப்பசாமி திருக்கோயிலில் 6.2.2017 திங்கட்கிழமையும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
4.2.2017 (சனிக்கிழமை)
காலை: 8.50 மணிமுதல் 11.00 மணிவரை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், மஹாகணபதி, நவகிரஹ, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 5.30 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ம்ருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
5.2.2017 (ஞாயிறு)
காலை: 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, இரண்டாம் காலயாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 6.00 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
6.2.2017 (திங்கள்)
காலை: 7.00 மணிக்குமங்கள இசை, நான்காம் காலயாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்படுதல்.
காலை: 9.07 மணிமுதல் 10.24 மணிவரை விமானம் மூலஸ்தானம் கும்பாபிஷேகம்
யாகசாலை வேளையில் வேத பாராயணமும், திருமுறை பாராயணமும் நடைபெறும். பிற்பகல்: 12.30 மணிக்குமேல் அன்னதானம் நடைபெறும்.
சர்வ சாதகம்: முத்துராமன் பட்டர், விஸ்வேஸ்வரர் ஆலயம்,
அண்ணாநகர், மதுரை.
தொடர்புக்கு:
இரா.பாலமுருகன்,தலைவர்,
ஏ.சி. குணசேகரன், செயலாளர்.
ஏ.சி.ஏ.சங்கர்ராஜ், பொருளாளர்,
மொபைல்: 9994169125
மண்டலபூஜை நிறைவு: 17.2.2017 மாசி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை