பதிவு செய்த நாள்
06
பிப்
2017
02:02
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலின், 14ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய் நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின், 14ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில், அதிகாலை, 4:30 மணிக்கு, ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை, 9:30 மணிக்கு மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம், நண்பகல், 11:30 மணிக்கு கலசாபிஷேகம், மதிய ஆரத்தி நடைபெற்றது. ஆண்டு விழாவையொட்டி, காலை முதல், நள்ளிரவு வரை, தொடர்ந்து அகண்ட நாம பஜனை, ஆராதனை செய்யப்பட்டது. மாலையில் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார்.