பதிவு செய்த நாள்
06
பிப்
2017
02:02
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜர், 1,000மாவது ஆண்டு அவதார விழாவை முன்னிட்டு, சொற்பொழிவு மற்றும் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த, ஆயிரமாவது ஆண்டு விழா, ஏப்., 22ல் துவங்கி, மே 1ம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது. ஆயிரமாவது ஆண்டு விழாவை பிரபல படுத்தும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், வாராந்திர தொடர் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. நேற்று முன்தினம், எம்பெருமானாரும் திருவாய்மொழியும் என்ற தலைப்பில், ஸ்ரீ.உ.வே.மதுசூதனன் சொற்பொழிவாற்றினார். நேற்று, வரதராஜனின் வயலின் இசை நிகழ்ச்சியும், பாண்டிய நாடும் பாஷ்யகாரரும் என்ற தலைப்பில், செங்கோட்டை ஸ்ரீராமும் சொற்பொழிவாற்றினர்.