Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனுக்கு பிடித்த அபிஷேகம்! திருவிழா கூட்ட நெரிசலில் வழிபாடு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
05:02

*உள்ளத்தில் இருப்பதை மறைத்து, வெளியுலகில் நல்லவர் போல பேசுபவர்களிடம் பழக வேண்டாம். ஒருமித்த மனதுடன் கடவுளை நினைக்கும் உத்தமர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.
*அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன் கருணையின் இருப்பிடமாக உள்ளார். கடலைப் போல பெரிதிலும் பெரிதாகவும், சிறு கடுகு போல சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறார்.
*உலகமெல்லாம் நலமுடன் வாழ தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நம் அனைவரின்  தனி நலமும் அதிலேயே அடங்கி விடும்.
*ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கொள்கையுடன் வாழுங்கள். எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உயர்ந்த பக்தியாகும்.
*பக்தி மூலம்  இறை அனுபவத்தைப் பெறுவதற்காகவே நமக்கு இந்த உடலும், உயிரும் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது.
*உயிர்கள் மீது இரக்கம் கொள்வதையே ஜீவகாருண்யம் என்கிறோம்.
*காலத்தைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். அரிய மனிதப்பிறவியைப் பெற்றிருக்கும் நாம்,  பக்தியில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்க வேண்டும்.       
*எல்லாம் கடவுளின் செயல் என்ற உண்மையை உணர்ந்தவர்களின் வாழ்வில் துன்பமோ, கவலையோ உண்டாகாது.
*எண்ணமும், செயலும் ஒன்றுபட வேண்டும். கைகள் ஜெபமாலையை உருட்ட, வாய் திருநாமத்தை ஜெபிக்க மனம் மட்டும் உலக விஷயங்களில் அலைந்து திரியக் கூடாது.
*தியானம் மூலம் கடவுளை எளிதாக அடைய முடியும்.  விடாமுயற்சியும், இடைவிடாத பயிற்சியும் தியானம் செய்ய மிக அவசியம்.
*நிழல் தரும் மரங்களைப் பாதுகாப்பதும், பறவைகளைக் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாகப் பறக்க விடுவதும், பக்தர்களுக்கு உதவி செய்வதும் சிறந்த அறச்செயல்களாகும்.
*பிறருக்கு உதவ முடியாவிட்டாலும், மற்றவர் தர்மம் செய்வதை தடுக்கக் கூடாது. பேச்சில் கோபம், கடுஞ்சொல், பொய் கலந்திருக்கக் கூடாது.
*பயத்தில் நடுங்குவதும் தவறு. அறவே பயம் இல்லாமல் இருப்பதும் தவறு. தேவையான சமயத்தில் பயப்பட வேண்டியதற்கு பயப்படுவதும் மனிதனுக்கு அவசியம்.
*தனிமையில் இருந்து மன அமைதியைப் பெருக்குங்கள்.  கடவுளின் அருளைப்
பெறுவதற்காக விழிப்புடன் இருங்கள்.
*கருணை என்னும் பண்பு நிறைந்தவராக இருங்கள்.  உள்ளத்தில் அன்பு ஊற்றாகப் பெருகச் செய்யுங்கள்.
*படைத்த கடவுளை உயிர்கள் மறந்து வாழ்கின்றன. ஆனால், கடவுள் உயிர்களை ஒருபோதும் மறந்ததில்லை.
*பல காலம் கடவுளை வணங்கிப் பெறுகின்ற நற்பலன்களை எல்லாம், ஒரே நாளில்  செய்யும் சிறு தர்மத்தினால் அடைய முடியும். (மகான் வள்ளலார்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar