தி.மலை அருணாச்சலேஸ்வரர் கும்பாபிஷேக விழா நிறைவு: பஞ்சமூர்த்திகள் உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2017 04:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக நிறைவுவிழாவில், இரவு நடந்த உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கும்பாபிஷேக நிறைவுவிழாவில் நேற்று இரவு நடந்த உற்சவத்தில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தங்க ரிஷப வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி கற்பக விருச்சகத்தில் விநாயகர், வெள்ளி தேரில் சமேத வள்ளி, தெய்வானையுடன் முருகர், வெள்ளி இந்திர விமானத்தில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.