பொதுவாக, மோட்சத்துக்கான காரணம் நாமேதான்! நல்ல உலகத்துக்குத்தான் குழந்தைகள் தேவை. அதாவது, நரகத்தில் செல்லாமல் நல்ல உலகத்துக்குச் செல்ல, வாழும் காலத்திலேயே நல்லவிதமாக தான, தர்மங்களைச் செய்து பழகியிருந்தோம் என்றால், நல்ல கதியை அடைவோம். அல்லது குழந்தைகள் நல்லவிதமாக தான, தர்மங்களைச் செய்தால் நாம் நல்ல கதியை அடைவோம். கதி என்பது பாதை அல்லது உலகம். குழந்தைகளால் எல்லாம் ஒருவர் மோட்சத்தை அடைந்துவிட முடியாது. குழந்தை இல்லை என்பதற்காக ஒருவர் மோட்சத்தை அடைய முடியாது என்றும் கிடையாது. அவரவரின் வைராக்யம், பக்தி, ஞானம், அதற்கான முயற்சி ஆகியவைதான் மோட்சத்துக்கு முக்கியக் காரணம். குழந்தை இல்லை எனினும், பகவானையே குழந்தையாக நினைத்து, உலகத்தையே குழந்தையாக நினைத்து, உதவிகளைச் செய்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கயாவுக்குச் சென்று நம் கடன்களை சரியாக நிவர்த்தி செய்து கொண்டாலே, மோட்சம் நமக்கு நிச்சயம் கிட்டும்.