Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
11:02

சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 12-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கிறது. புதிய கொடி மரம் அமைப்பதற்காக 17-ம் தேதி தற்போதைய கொடி மரம் அகற்றப்படுகிறது.மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து கடந்த மாதம் 20-ம் தேதி காலை அடைக்கப்பட்ட சபரிமலை நடை 12-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் திறக்கிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 13-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.தொடர்ந்து வழக்கமான கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை, உதயாஸ்தமனபூஜை, சகஸ்ரகலசம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 17-ம் தேதி வரை எல்லா நாட்களில் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும்.

இங்கு தற்போதுள்ள கொடிமரம் பழுதடைந்துள்ளதால் புதிதாக தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேக்கு மரம் மூலிகை எண்ணெய்யில் பதப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரும் 17-ம் தேதி தற்போதைய கொடி மரம் அப்புறப்படுத்தும் பணி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் பணிகள் தொடங்கும். ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar