கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் முருகப்பெருமானுக்கு தைப்பூச விழா நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு தைப்பூச விழா சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல், கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன், இந்திலி பாலசுப்பிரமணியர், நீலமங்கலம் சொர்ணபுரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.