யாஜ் என்னும் பதத்துக்கு யாகம் என்பது பொருள். யாகம், பலி, தானம் முதலிய கிரியைகளைச் செய்யவேண்டிய முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. அமாவாசை, பவுர்ணமி காலங்களில் செய்ய வேண்டிய வேள்விகளைப் பற்றியும், பிதுர் கர்மம் முதலியன செய்ய வேண்டிய விதங்களைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. மிகச்சிறப்பு வாய்ந்த ருத்ரம் இதில் அமைந்துள்ளது.