பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
விழுப்புரம்: விழுப்புரத்தில் பங்காரு அடிகளாரின் 77 வது பிறந்த நாளையொட்டி, வேள்வி பூஜை நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து நடந்த கலச விளக்கு வேள்வி பூஜையை, மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதையடுத்து, ஆன்மீக ஜோதியை மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஏற்றி வைத்தார். இந்த ஜோதி உலா, வரும் 28 ம் தேதி மேல்மருவத்துார் சென்றடைகிறது. துணை தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, தணிக்கை குழு மணிவாசகம், இளைஞரணி சண்முகம், செயலாளர் பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், சுந்தரராஜன், மகாலிங்கம், செல்வராஜி, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சக்திபீட பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, சீத்தாராமன், சண்முகம் ஆகியோர் செய்தனர். வேள்விக்குழு தலைவி திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.