தட்ச யாகத்தில் கலந்துகொண்ட தேவர்களை அடிக்க வந்த வீரபத்திரருக்கு அஞ்சி மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கருங்குயில் நாதன்பேட்டை ஈசனை குயில் வடிவில் இந்திரன் பூஜித்தான் என்கிறது கோயில் வரலாறு. சக்திபுரீஸ்வரர், கருங்குயில்நாதர் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்தல இறைவனை வழிபட்டால் இனிமையான குரல் வளம் கிட்டும் என்பது நம்பிக்கை.