பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் அமைந்துள்ளது திரிபுரமாலினி திருக்கோயில். அன்னை இங்கு காளி ரூபத்தில் தரிசனம் தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்த கோயிலின் பிராகாரத்தில் ஹரிவல்லப சங்கீத சம்மேளத்தினரால் இசைவிழா மிகவும் கோலாகலமாக நடத்தப்படுகிறது பஞ்சாப் மொழிப் பாடல்களின் நாத அலைகள் பக்தர்களை ஈர்த்து மெய்மறக்கச் செய்கின்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இது கடந்த 125 வருடங்களாகத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.