ஆன்மிகத் திருச் சின்னங்களுள் ஒன்று, சங்கு. பல நேரங்களில் கோயில்களில் தீபாராதனை நேரத்திலும், ஏதாவது சுபகாரியம் நடக்கும் போதும் சங்கொலி எழுப்பப்படுகிறது. பண்டைய காலத்தின் போரின் ஆரம்பத்திலும், சேனை வெற்றியடையும்போதும் சங்கநாதம் செய்வது வழக்கமாக இருந்தது. சங்கை பூஜை அறையில் வைத்து அதை வழிபடவும் செய்கிறார்கள். சங்கொலி மற்றும் பல்வேறு இசைக்கருவிகளின் மங்கள நாதத்தின் முக்கிய நோக்கம், சூழ்நிலையைப் புனிதமானதாக ஆக்குவதுதான். மகாபாரதப் போரின்போது கிருஷ்ணர் பஞ்சஜன்யம் என்னும் சங்கை ஊதி ஒலி எழுப்பினதாகக் கூறப்படுகிறது. சங்கொலி காரணமாக, சாதகர்கள் மற்றும் பக்தர்களின் மனமும் சிந்தையும் கூடப் புனிதமாகின்றன. புராதன பாரதத்தில் பெரிய நகரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. எங்கு பார்த்தாலும் சிறு சிறு கிராமங்களே அதிகமாக இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய-பெரிய கோயில்கள் இருந்தன. அந்தக் கோயில்களில் நடக்கும் முக்கியமான பூஜை நேரங்களில் சங்கொலி எழுப்பப்படும். அதன் மூலம் ஊர் முழுவதற்கும் அது தெரிந்து, முடிந்தவர்கள் கோயில்களுக்குச் செல்வார்கள். முடியாதவர்கள் சங்கநாதம் கேட்டு தங்கள் இருக்குமிடத்திலிருந்தே கடவுளை நினைவுகூர்ந்து சற்று நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.