பதிவு செய்த நாள்
14
பிப்
2017
03:02
ஆகம விதிப்படி அமைந்துள்ள ஒரு சிவாலயத்துக்குள் நுழைந்தால் நந்திதேவர், மூலவர் சிவன், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர், நவகிரகங்கள் அம்பாள் என்று அனைத்து தெய்வங்களும் அவரவருக்குரிய இடத்திலிருந்து காட்சி தருவார்கள். ஆனால் பண்டைய சோழநாட்டையே சிவாலயமாக எண்ணி, ஆங்காங்கே ஒவ்வொரு தெய்வமும் சிறப்பாக விளங்குமாறு பல கோயில்களை அமைத்துள்ளார்கள் இது ஆன்மிக அதிசயம் ஆகிறது. திருவிடைமருதுõர் மகாலிங்க சுவாமி மூலவராக அமையப்பெற்ற கோயிலை மையாக வைத்து மற்ற தெய்வங்கள் பரிவார தேவதைகளாக விளங்குகின்றன. சிவாலயங்களின் அமைப்பைப் பார்த்தால் காவிரி பாயும் சோழநாடே ஒரு பெருங்கோயிலாகத் தோன்றுகிறது. திருவலஞ்சுழி - விநாயகர், சுவாமி மலை - முருகன், திருவாவடுதுறை - நந்திதேவர், ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி, பட்டீஸ்வரம் - துர்க்கை, திருவாய்ப்பாடி - சண்டிகேசர், சிதம்பரம் - நடராசர், திருவாரூர் - சோமாஸ்கந்தர், சீர்காழி - பைரவர், சூரியனார்கோவில் - நவகிரகங்கள், மயிலாடுதுறை - அம்பாள்.