திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2017 11:02
நாகை: திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்கோயிலில்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.
இந்த கோயில் காசிக்குணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக முதற்கடவுளாக வி ளங்கும் புதன் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். சிவனின் ஜந்துமுகங்களில் ஒன்றான அகோரமுகம், இந்த கோயிலில் அகோரமுர்த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்கு கிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிடணீகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராம யணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மை பற்றி கூறபட்டுள்ளது. இந்த கோயிலின் ஆண்டு இந்திரபெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம்தேதி தொடங்கியது. நேற்று தேரோ ட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை தேருக்கு பிரம்மவித்யாம்பாளுடன் சுவேதாரண்யேஸ்வரர் பக்தர்களால் கொண்டு வரபட்டார். இந்த விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டு தோரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி மற்றும் சண்டி கேஸ்வர் தேர் புறப்பட்டது. இதில கோயில் நிர்வாக அதிகாடணீ முருகையன், உதவி ஆணையர் பாலசுப்பரமணியம், சீர்காழி தாசில்தார் மலர்விழி உள்ளிட்ட ஏராளமான பக்தர்க ள் கலந்து கொண்டனர்.