பதிவு செய்த நாள்
15
பிப்
2017
01:02
புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி அண்ணா சாலையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கு, இந்து அறநிலையத்துறையின் முதல் தவணை தொகை ரூ.௧௫ லட்சத்தை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., சிவா முன்னிலையில், முதல்வர் நாராயணசாமி கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகளிடம் முதல் தவணைத் தொகை ரூ. 15 லட்சத்தை வழங்கினார்.நிகழ்ச்சியின் போது, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் சிவராஜ், கதிர்வேல், அனந்தராமன், தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் குணா திலீபன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தொகுதி செயலாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.