Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் விரைவில் இரண்டாவது ... ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் சிவராத்திரி பிரதோஷ விழா கோலாகலம் ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் காரி நாயனாருக்கு குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் காரி நாயனாருக்கு குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

24 பிப்
2017
11:02

திருப்பூர் ;திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காரி நாயனார் குரு பூஜை விழா நடைபெற்றது.திருக்கடவூர் என்ற இடத்தில், காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார். புலமைமிக்க இந்த சிவனடியார், தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறனை பெற்றிருந்தார். கோவில்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்க பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம், தமது பெயரால் "காரிக்கோவை என்ற நூலை இயற்றினார்.

மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பை பெற்றார். அவர்களுக்கு, நூலின் தெள்ளிய உரையை நயம்பட கூறினார்.அவரது தமிழ்ப்புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும், பொன், பொருட்களை பரிசளித்து சிறப்பித்தனர். பொற்குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய காரி நாயனார், சிவன் கோவில்களை புதுப்பித்தும், புதிதாக கட்டியும் கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து, பெரு நிதிகளை அள்ளிக் கொடுத்து, அகமகிழ்ந்தார். திருக்கடவூரில் கோவில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாலும், பூமாலையாலும் சேவித்தார்.அவரது குருபூஜை விழா, மாசி மாதம் பூராடம் நட்சத்திர நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, காரி நாயனாருக்கு, நேற்றுமுன்தினம் குரு பூஜை விழா நடைபெற்றது.இதையொட்டி, அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டத்தின் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar