Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் காரி ... சிவராத்திரி - சிவதத்துவத்திற்கு உயிரூட்டுகிறது! சிவராத்திரி - சிவதத்துவத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் சிவராத்திரி பிரதோஷ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் சிவராத்திரி பிரதோஷ விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2017
11:02

ஊத்துக்கோட்டை : சிவராத்திரி விழாவயொட்டி, சிவாலயங்களில் நான்கு கால அபிஷேகங்கள், பிரதோஷ விழாவும் இன்று மாலை நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை வேளைகளில் வால்மிகீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும், சிறப்பு பூஜைகள், நான்கு கால யாக பூஜை, பரத நாட்டியம், கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இரவு உற்சவர் சிவபெருமான் மற்றும் சர்வமங்களா ஆகிய தெய்வங்கள் ஒவ்வொரு நாளும், பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று, மாலை, 4:30 மணிக்கு, பிரதோஷ விழாவும், மாலை, 6:00 மணிக்கு, முதல்கால யாக பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, 2வது யாக பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, 3வது கால யாக பூஜை, நாளை, அதிகாலை, 4:00 மணிக்கு 4வது கால யாக பூஜையும் நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், காரணீஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பூந்தோப்பு பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar