பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
இடைப்பாடி: ஒட்டப்பட்டி ஆனந்தாயி கோவில் விழாவில், 1,008 பால் குடங்களை எடுத்து, பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டி, ஆனந்தாயி அங்காளம்மன் சுவாமியின், மாசி மாத உற்சவ கொடியேற்று விழா கடந்த வாரம் நடந்தது. பிப்24, மாலை, ஸ்ரீபரமானந்தம் சுவாமிகள் தலைமையில், 1008 பக்தர்கள், பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்தனர். இதில், இடைப்பாடி, ஒட்டப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அம்மாப்பேட்டை, பவானி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து, பக்தர்கள் பங்கேற்றனர்.