பதிவு செய்த நாள்
27
பிப்
2017
12:02
குன்னுார் : குன்னுார் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சவுடேஸ்வரி அம்மனுக்கு சிவசக்தி அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, பிரதோஷ வழிபாடுகள், நான்கு கால அபிஷேகங்கள், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. இதே போல, குன்னுார் வி.பி., தெரு பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிவனுக்கு சிறப்பு அபிஷகேம், அலங்காரம், பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. எடப்பள்ளி சாய்பாபா கோவிலில், சிறப்பு வழிபாடுகள், பஜனை ஆகியவை நடந்தன.