பதிவு செய்த நாள்
27
பிப்
2017
12:02
ஈரோடு: ஈரோடு பிரப் ரோடு, பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களில், மார்ச், 14ல் குண்டம் திருவிழா துவங்குகிறது. ஈரோடு பிரப் ரோடு பெரிய மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் என மூன்று கோவில்களில் ஒருங்கே திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்ச், 14ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்குகிறது. 18ல் கம்பம் நடுதலும், 22ல் கிராமசாந்தி, 23ல் கொடியேற்றம், 28ல் அதிகாலை, 5:30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் பூமிதித்தல் நடக்கிறது. மார்ச், 29ல் காலை, 9:30 மணிக்கு பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்தல், 31ல் தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் கோவில் சன்னதி சேருதல் நடக்கிறது. ஏப்.,1ல் கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன், காரை வாய்க்காலில் விடுதலும், 2ல் மறுபூஜையும் நடக்கிறது.