பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
விளாத்திகுளம்,: விளாத்திகுளம் கற்பகவிநாயகர் கோயிலில் உலநலன் வேண்டியும், பருவமழை பெய்ய வேண்டியும் நாராயணசேவை நடந்தது. விளாத்திகுளம் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சார்பாக உலகநலன் வேண்டியும், பவருமழை வேண்டியும் கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு, பஜனை மற்றும் நாராயண சேவை நடந்தது. நிகழ்ச்சிக்கு சாய் முருகேசன் தலைமை வகித்தார். டவுன் பஞ்.,வார்டு கவுன்சிலர்கள் பால்ராஜ், செண்பகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்.,தலைவி ஓவம்மாள் நாராயண சேவையை துவக்கி வைத்தார். சேவா சமிதியை சேர்ந்த ராஜேஸ்வரி வரவேற்றார். வள்ளுவர் வாசகர் பேரவை தலைவர் இளையராஜா மழை வேண்டி பதிகம் பாடினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக.,மாவட்ட அவைத் தலைவர் துரைராஜ், சத்யசாய் சேவா சமிதியை சேர்ந்த உறுப்பினர்கள் சுந்தரி, வையம்மாள், தர்மர், பெருமாள்சாமி, ஆறுமுகச்சாமி, துரைச்சாமிபுரம் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாய்‘ரிய நாராயணன் நன்றி கூறினார்.