பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன் சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 6.00 மணிக்கும், 10 மணிக்கும் முருகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை 10.00 மணிக்கு உற்சவ காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் குருக்களும், பரம்பரை அறங்காவலருமான அய்யாசாமி காப்பு கட்டி விழாவை துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம் தலைமை வகித்தார். மாலை 4.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு கந்தபுராண சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து, வரும் 31ம் தேதி வரை முருகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளது. வரும் 30ம் தேதி மாலை 6.00 மணிக்கு முருகர் வேல் வாங்கும் உற்சவமும், மறுநாள் (31ம் தேதி) மதியம் 3.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கும். பேரூர் இளையபட்டம் ஆதீனம் மருதாசலஅடிகள் தலைமையில் விழா துவங்குகிறது. இதில், சத்திரம் வீதியும், தெப்பக்குளம் வீதியும் இணையும் இடத்திலும், வெங்கட்ரமணன் வீதி சந்திப்பு, ராஜாமில்ரோடு, உடுமலை ரோடு தேர்நிலை ஆகிய இடங்களில் நான்கு சூரன் தலைகள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை பக்தர்கள் தண்டு விரதமிருந்து வழிபடுகின்றனர். சூரன் வதை செய்யும் நிகழ்ச்சிக்குபின், கோவிலில் வாழைத்தண்டு, பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வர். விழாவுக்கான ஏற்பாட்டை, கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.