Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதிப்பு உயர என்ன செய்வது? சுத்தமான மனநிலையுடன் இறைவனை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவலையே இல்லாத நகரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
04:02

கடும் வெயில்காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும். அதன் காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும். மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செல்லும் போது, உயரே செல்லச் செல்ல, கடல் மட்டத்திற்கு மேல் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் அறிவிப்பு பலகைகளைக் காணலாம். உயர உயர போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்பதிலே ஒரு வகை மகிழ்ச்சி ஏற்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் டவுன் என்ற நகரம், ஒரு மலை உச்சியில் உள்ளது. சுற்றுலா பயணிகள் அங்கே ஒரு வித்தியாசமான அறிவிப்பு பலகையைக் காணலாம். “குவின்ஸ்டவுன் உங்களை வரவேற்கிறது. நீங்கள் கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே இருக்கிறீர்கள்” என்ற இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, எல்லா மனிதர்களும் கவலைப்படுகிறார்கள். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால் கவலைகளை மறந்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுற்றுலா தலத்தை விட்டு கீழே இறங்கியதும் மீண்டும் நமது பணிகளில் ஈடுபடுவோம். கவலைகள் மீண்டும் தொற்றிக் கொள்ளும். கவலையே படாமல் இருக்க வேண்டுமானால் பைபிள் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். “உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்,” என்ற வசனத்தை நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஆண்டவரிடம் கவலைகளை ஒப்படைத்து விட்டால், அதை மறப்பதற்கு எந்த இடத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது கவலைகளை அவரே ஏற்றுக் கொள்வார். எங்கிருந்தாலும் நாம் கவலை இல்லாமல் வாழ முடியும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar