ஒருவர் தன் தேவையைக் கூறி இறைவனிடம் பிரார்த்தித்தால், அவர் கேட்டதை தந்து விடுகிறான். அல்லது அவருடைய வேறு தேவையை பூர்த்தி செய்கிறான். அல்லது இப்போது வைத்த கோரிக்கையை அவருக்காக மறுமையில் சேகரித்து வைக்கிறான். இப்படியாக, பிரார்த்தனை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இதையே துஆ என்பர். பிரார்த்தனை செய்யும்போது, ஒழுங்குமுறைகளையும் துõய்மையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அசுத்தமான உணர்வுகள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டு மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் ...திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், துõய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான் எனக்கூறப்பட்டுள்ளது. எனவே, பிரார்த்தனையின் போது மனநிலையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதின் அவசியம் புரிகிறது.