சுல்தான் சலாஹுத்தீன் அய்யூப், ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுபவர். அவரது ஆட்சியில் எல்லா மதத்தினரும் அவரவர் உரிமைகளைப் பெற்றிருந்தனர். அன்றைய தினம் ஜெருசலேம் முஸ்லிம் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. இவ்வூரை எப்படியேனும் தங்கள் வசம் கொண்டு வந்து விட வேண்டுமென கிறிஸ்தவ மன்னர்கள் முடிவெடுத்தனர். அனைவரும் கூட்டாக இங்கிலாந்து மன்னர் ரிச்சர்டு தலைமையில் சுல்தான் மீது படையெடுத்தனர். இருதரப்புக்கும் கடும் போர் நிகழ்ந்தது. சுல்தான் சற்றும் கலங்காமல், ஏக இறைவனையே நம்பி களத்தில் நின்றார். அதேநேரம் அவருக்கு ஒரு ஆச்சரியம்! எல்லா மன்னர்களும் களத்தில் நின்ற வேளையில், தலைமை வகிக்கும் ரிச்சர்டை மட்டும் காணவில்லையே! ஏன் அவர் களத்துக்கு வரவில்லை என்பதே ஆச்சரியத்துக்கு காரணம். இதுபற்றி அவர் விசாரித்தபோது, ரிச்சர்டுக்கு உடல்நலமின்றி பாசறையில் படுத்திருப்பது தெரிய வந்தது. அன்றிரவு சுல்தான் அய்யூப், ஒரு பக்கீரைப் போல வேடமணிந்து பாசறைக்கு சென்றார். அங்கிருந்தவர்களிடம், ஐய õ! நான் மருத்துவம் அறிந்தவன். மன்னரைக் குணப்படுத்த முயற்சிக்கிறேன், என்றார். அவரும் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறே சில நாட்கள் தொடர்ந்து வந்து வைத்தியம் செய்தார். ரிச்சர்டு குணமானார். எதிரியென்றும் பாராமல், நோயுற்றவர்க்கு வைத்தியம் செய்த இந்த மனிதநேயப் பா ங்கு நமக்கும் வர வேண்டுமல்லவா!