Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எதிரியிடமும் கருணை காட்டுங்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதற்காக அஞ்ச வேண்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2017
05:03

உமர்(ரலி) அவர்கள் தெருவில் வருகிறார் என்றாலே, ஊரே நடுங்கும். தலைவர்கள் கூட அவருக்கு அஞ்சுவார்கள். சிறுவர்கள் அவர் வருவதை  அறிந்தால், விழுந்தடித்து ஓடி விடுவார்கள். அவர் மிகவும் நல்லவர். ஆனால், முன்கோபக்காரர். தவறுகளைக் கண்டிப்பவர்.  ஒருமுறை, அவர் தெ ருவில் வருவதை அறிந்த சிறுவர்கள், உமர் வருகிறார்! ஓடி விடலாம், என்று சிட்டாய் பறந்தார்கள். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் அவரைக் கண்டு  அஞ்சவில்லை. தைரியமாக தெருவில் நின்றான். உமர் மிகுந்த தோரணையுடன் சிறுவனை நெருங்கினார்கள். ஏனப்பா! உன் நண்பர்கள் எல்லாம்  என்னைக் கண்டு ஓடி விட்டார்கள். நீ மட்டும் தைரியமாய் நிற்கிறாயே! பயமில்லையா? என்று கேட்டார்கள். ஐயா! ஏன் இந்தத்தெரு அகலமாகத்தா னே இருக்கிறது. நான் வழிவிட்டால் தான், நீங்கள் போகும் அளவுக்கு குறுகியிருக்கிறதா என்ன! அது மட்டுமல்ல, உங்களைக் கண்டு பயந்து ஓடும்  அளவுக்கு, நான் தவறேதும் செய்யவில்லையே! என்று திருப்பிக் கேட்டான் சிறுவன். சிறுவனின் தைரியமான பதில் உமர்(ரலி) அவர்களைக் கவர்ந் தது. அவனை பாராட்டினார்கள். அந்த சிறுவன் தான், பிற்காலத்தில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) என்ற மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர்கள்.  குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar