பதிவு செய்த நாள்
03
மார்
2017
01:03
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி. கண்டிகை ஆகிய இடங்களில் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவில்களில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று, காலை 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தன. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.