கரூர்: தான்தோன்றிமலை வெங்கடரமண கோவிலில், தேர் திருவிழாவுக்கா கொடியேற்ற விழா நடந்தது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று கொடியேற்றத்துடன், மாசி தேரோட்ட விழா துவங்கியது. தொடர்ந்து, மஹா தீபராதனை நடந்தது. வரும், 9ல் திருக்கல்யாணம், 11ல் தேரோட்டம், 13ல் தெப்பத்திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.