பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, மஞ்சள் நீராட்டுடன் நிறைவடைந்தது. பவானி நகரின் காவல் தெய்வமாக கருதப்படும், செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களில், மாசி பொங்கல் விழா, கடந்த, 1ல் நடந்தது. மறுநாள் தேரோட்டம் நடந்தது. அதன்பின், கம்பம் எடுத்து ஆற்றில் விடப்பட்டது. நேற்று காலை செல்லியாண்டியம்மன் கோவில் அருகில் உள்ள மாரியம்மன், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன், மேற்குதெரு மாரியம்மன் கோவில்களில், அம்மனை வீதி வீதியாக ஊர்வலமாக கொண்டு சென்று, மஞ்சள் நீராட்டம் நடந்தது. இத்துடன், மாசி திருவிழா முடிவுக்கு வந்தது.